WED, 06. June 2007   Download Baamni  Tamil Font   Sithiram Font

Raeythjpfs;fz;fSf;F ehq;fs; JNuhfpfs;

   nghJeythjpfs;fz;fSf;F ehq;fs; jpahfpfs;  

 nrhd;dtu; ajhu;j;jthjp

***************************************************************************************************   

 tpNrl gjpg;G gf;fk;

 

புலிகளின் பிரதான முகாம் விமானத் தாக்குதலை மேற்கொண்டனர் அழிப்பு! நாள்:06 A+d;.2007  

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள தொப்பிகல காட்டுப் பிரதேசத்தில் அமைந்திருந்த இரண்டு பிரதான முகாம்கள் மீது கடந்த 2 ஆம் திகதி ஷ்ரீலங்கா விமானப்படையினர் கடும் விமானத் தாக்குதலை மேற்கொண்டனர். அன்று மதிய வேளையில் விமானப் படையின் இரண்டு ஜெற் விமானங்கள் மூலம் தொடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களில் புலிகளின் குறித்த இரண்டு முகாம்களும் முற்றாக நாசமாக்கப்பட்டதாக விமானப்படை தரப்பு தெரிவித்துள்ளது.

புலிகள் இயக்கத்தினரின் பிரதான முகாம்களை தாக்கியழிக்கும் விமானப்படையினரின் விமானத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மேற்படி ஜெற் விமானத்தாக்குதலில் முற்றாக அழிக்கப்பட்ட குறித்த இரண்டு தொப்பிகல முகாம்களில் வைத்தே வாகனங்களுக்கு குண்டுகள் பொருத்தும் நடவடிக்கைகளைப் புலிகள் இயக்கத்தினர் செய்து வந்ததாகவும் தற்போது இந்த இரண்டு முகாம்களும் அழிக்கப்பட்டு விட்டன எனவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த இரண்டு முகாம்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பெருந்தொகையான வாகனங்களும் விமானத் தாக்குதல்களின் போது வெடித்துத் தீப்பற்றியதாகவும் இதனை விமானத் தாக்குதல்களின் பின்னர் செய்யப்பட்ட விமானக் கண்காணிப்பின் போது விமானிகள் பார்த்ததாகவும் விமானப்படை சிரேஷ்ட உத்தியோகத்தர் மறுநாள் லங்காதீபவுக்கு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மேற்படி புலிகளின் பிரதான தொப்பிகல முகாம்களும் வாகனங்களும் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் அந்த முகாம்களில் இருந்த புலிகள் இயக்கத்தினர்களுக்கு நேர்ந்த கதி பற்றி இதுவரை தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அதற்கான விசாரணைகளை விமானப்படையினர் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் குறித்த விமானப் படை சிரேஷ்ட அதிகாரி கூறினார்.

விமானப்படை மேற்கொண்ட விமானக் கண்காணிப்பு நடவடிக்கை மூலமும் மற்றும் பாதுகாப்பு புலனாய்வுத்தரப்பு மூலமும் கிடைக்கப் பெற்ற தகவல்களைத் தொடர்ந்தே புலிகளின் குறித்த பிரதான முகாம்கள் இரண்டும் தேடி அழிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

---------------------------------------------------------------------------------------------------------

tmp.jpgகருணா,mk;khd; பிள்ளையான்  சந்திப்பு

[18 - May - 2007] 

கருணாவின் போட்டிக்குழுத் தலைவராகிய பிள்ளையானின் நெருங்கிய சகாவாகிய சிந்துஜனை அண்மையில் கருணா குழுவைச் சார்ந்த இளையபாரதி' திலீபன் தலைமையிலான கோஷ்டியினரே கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இதைத் தொடர்ந்து சிந்துஜனின் தந்தையையும் குறித்த இளையபாரதி, திலிபன் ஆகியோரின் குழுவினர் கொலை செய்துள்ளதாகவும் இதனால் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையேயான இந்த மோதல் மேலும் தீவிரமடைந்து இரு தரப்பிலும் மேலும் பல கொலைகள் நடப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

பிள்ளையான் குழுவிற்கு கருணாவை கொல்லுவதைவிட, கருணா குழுவைச் சேர்ந்தவர்களும் பிள்ளையானின் அன்புக்குரிய சிந்துஜனையும் அவருடைய தந்தையையும் கொன்றவர்களாகக் கூறப்படும் இளையபாரதி, திலீபன் ஆகியோரைக் கொல்லுவதே முக்கியமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்தவகையில் பிள்ளையானின் தற்போதைய இலக்குகள் மேற்படி இளையபாரதியும் திலீபனும் என்றே குறித்த வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இரண்டு குழுவினருக்கும் இடையிலான இந்த தீவிர மோதல் நிலையிலும் கடந்த வார இறுதியில் பிள்ளையானும் கருணாவும் இரகசியமாகச் சந்தித்துக்கொண்டதாகவும் சம்பந்தப்பட்டவர்களின் ஏற்பாட்டின் படி இந்தச் சந்திப்பு மிகவும் இரகசியமான முறையிலேயே நடந்துள்ளதாகவும் இந்த இரகசிய சந்திப்பின்போது கருணாவும் பிள்ளையானும் தமக்கிடையேயிருந்த பல பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்துக்கொண்ட தாகவும் இதன் மூலம் கருணா குழுவினருக்கும் பிள்ளையான் குழுவினருக்கும் மோதல்கள் பெருமளவில் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தச் சந்திப்பின்போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கருணா அவருடைய அரசியல் கட்சியின் தலைவராக மட்டுமே இயங்குவாரெனவும் பிள்ளையான் ஆயுதப்படையின் தலைவராகச் செயற்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், கருணாவும் பிள்ளையானின் முக்கிய இலக்குகளாகிய இளையபாரதி, திலீபன் மற்றும் நெருங்கிய சகாக்கள் வெளிநாட்டுக்குச் சென்று அங்கிருந்துகொண்டே தமது கட்சி நடவடிக்கைகளை வழிநடத்தி வருவார்கள் எனவும் இந்த வகையில் கருணாவும் அவருடைய நெருங்கிய சகாக்களும் வெளிநாடு செல்லுவார்கள் எனவும் தெரியவருகிறது. எவ்வாறாயினும் கருணாவும் சகாக்களும் எப்பொழுது நாட்டைவிட்டு வெளியேறுவார்கள் என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறே ஆயுதப் படைபிரிவின் தலைவராக செயற்படுவதாகக் கருதப்படும் பிள்ளையான் கருணாவுடனான மேற்படி  சந்திப்பில் மேற்கண்டவாறு தீர்மானங்களைச் தெரியவந்துள்ளது.

சிங்கள சாரதி, உதவியாளர் புலிகளுக்காக பெருந்தொகை தொலைத்தொடர்பு உபகரணம் கடத்தல்
[16 - May - 2007] 

---------------------------------------------------------------------------------------------------------
வவுனியா, ஈரப்பெரிய குளம் பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கடந்த 12ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்தின் பேரில் லொறி ஒன்றை சோதனை செய்ததில் பெருந்தொகையான தொலைக்காட்சி பெட்டிகளும் அதற்குள் அதி முக்கியத்துவம்வாய்ந்த தொலைத்தொடர்பு உபகரணங்களும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப்பிரதேசத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு புலிகள் இயக்கத்துக்கு கொடுப்பதற்காக இவ்வாறு லொறிக்குள் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலின்படி மேற்படி லொறி கொழும்பிலிருந்து புறப்பட்டே இவ்வாறு வன்னிநோக்கி வந்துகொண்டிருந்ததாகவும் மறைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தொலைக்காட்சிப்பெட்டிகளும், தொலைத்தொடர்பு உபகரணங்களும் கொழும்பில் வைத்தே ஏற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு மேற்படி மறைத்துவைக்கப்பட்ட பொருட்களுடன் குறித்தலொறி ஒன்று வந்துகொண்டிருப்பதாக முன்னரே வவுனியா பொலிஸ் நிலையத்துக்கும் ஈரப்பெரிய குளம் பொலிஸ் சோதனைச் சாவடிக்கும் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கும் கொழும்பில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் எச்சரிக்கையுடன் செயற்பட்ட ஈரப்பெரியகுளம் பொலிஸார் காத்திருந்து 12ஆம் திகதி பிற்பகல் மேற்படி லொறியை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டுக் கைப்பற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த லொறியை பொலிஸார் சோதனையிட்டபோது அதற்குள் உருளைக்கிழங்கு, வெங்காயம், கடலை, பருப்பு,பயறு ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மூடைகளே ஏற்றப்பட்டிருந்தன எனவும் இவற்றை இறக்கிச் சோதனையிட்டபோதே இந்தப் பொருள் மூடைகளுக்குக் கீழ் தொலைக்காட்சிப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸார் அந்த தொலைக்காட்சிப் பெட்டிகளை கழற்றிச் சோதனையிட்டபோது அதற்குள் முக்கிய தொலைத்தொடர்பு உபகரணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு 32 தொலைக்காட்சிப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதற்குள் பெருந்தொகையான தொலைத்தொடர்பு உபகரணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

உண்மையில், அந்த 32 தொலைக்காட்சிப்பெட்டிகளையும் அதற்குள் வெடி குண்டுப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே தாம் சோதனையிட்டதாகவும் ஆயினும் அதற்குள் தொலைத்தொடர்பு சாதனங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களைப் பற்றிப் பொலிஸார் தெரிவித்திருக்கும் விபரங்களுக்கேற்ப 30 மகலன் வகை பி.பி.எஸ். இயந்திரங்கள், 22 ஐகொம் தொலைத்தொடர்பு இயந்திரங்கள், 487 ஐ.சி.வி. 82 வகை ஐகொம் இயந்திரங்கள், 10 ஐ.சி.ஆர். 20 வகை ஐகொம் இயந்திரங்கள், 47 ஐகொம் கையியந்திரங்கள், 7 அலன் வகை கை இயந்திரங்கள், 352 ஐகொம் அன்டனாக்கள், 45 வேறுவகை அன்டனாக்கள், 495 ஐகொம் பதிவு உபகரணங்கள் மற்றும் 304 ஐகொம் பற்றரி கவர்கள், 19 டேற்கேபிள்கள் ஆகியன பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு புலிகள் அமைப்பிற்காக தொலைத்தொடர்பு சாதனங்களைக் களவாகக் கடத்திச் சென்ற லொறியை ஓட்டி வந்த சாரதியும், உதவியாளரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களே என பொலிஸ் அறிவித்துள்ளது. இவர்களிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையிலிருந்து கொழும்பில் போதிராஜ மாவத்தை வீதியிலுள்ள பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவருக்குரிய பண்டகசாலையில் வைத்தே மேற்படி அத்தியாவசியப் பொருட்களுடன் சேர்த்து குறித்த தொலைக்காட்சிப் பெட்டிகளும் அதற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு உபகரணங்களும் ஏற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும், இவ்வாறு அந்த லொறியில் அவை ஏற்றப்படுவதற்கு முன்னர் தம்புள்ள வியாபார நிலையம் ஒன்றில் வைத்து அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு மஹரகமவிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் இறக்கப்பட்டுள்ளன. கொழும்பு போதிராஜமாவத்தையில் தமிழ் வர்த்தகரின் களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பிரதேசத்துக்கு கொண்டு செல்வதற்காகவே ஏற்றப்பட்டதாக மேற்படி சிங்கள இனத்துச் சாரதியும் உதவியாளரும் பொலிஸ் தரப்பினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது தகவல் கூறியுள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக புலன் விசாரணைகளை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களின் பயிற்சி முகாம் முற்றாக அழிப்பு
12- May - 2007

---------------------------------------------------------------------------------------------------------

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்குப் பாதுகாப்பு அளித்துவரும் விசேட படையணியினர்களுக்கு பயிற்சி அளிக்கும் பிரத்தியேகமான முக்கிய முகாம் தொடர்கள் கடந்த 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களின் போது முற்றாக அழிக்கப்பட்டதாக விமானப் படையினர் தரப்பு தெரிவித்துள்ளது. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களின் மேற்படி விசேட முகாம் கிளிநொச்சி பிரதேசத்தில் இரணைமடு பகுதியில் ராமநாதபுரம் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்ததாகவும் அதனைக் குறிவைத்து விமானப் படையினரின் தாக்குதல் விமானங்கள் மேற்கொண்ட தீவிர தாக்குதல்களின் போது குறித்த பாரிய முகாம் முற்றாக நாசமாக்கப்பட்டதாகவும் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த பிரபாகரனின் மெய்ப்பாதுகாப்பு படையினரின் முகாமுக்கு அருகில் அமைந்திருந்த பாரிய ஆயுதக் களஞ்சியங்களும் மற்றும் மேலதிக படை முகாம்களும் மேற்படி விமானத் தாக்குதலுக்கு இலக்காகி அழிக்கப்பட்டுவிட்டதாக இராணுவ பாதுகாப்புத்துறை ஊடகப் பேச்சாளர் லங்காதீபவுக்கு தெரிவித்துள்ளார். இவ்வாறு தாக்குதல்களுக்குள்ளான இரண்டு முகாம் தொடர்களும் ஆயுதக் களஞ்சியங்களும் கடந்த 7 ஆம் திகதி பகல் முழுவதும் எரிந்து கொண்டிருப்பதை விமானப் படையினர் அவதானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விமானத் தாக்குதல்களினால் நாசமாக்கப்பட்ட முகாம்கள், களஞ்சியங்களில் அந்த சந்தர்ப்பத்தில் இருந்த புலிகள் இயக்கத்தினர் அனைவரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இதுபற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல்கள் விமானப் படையினரின் கண்காணிப்பு விமானங்கள் மூலமும் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு மூலமும் தெரியவந்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாக விமானப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனகபுர காட்டில் புலிகளுக்குள் மோதல் தகவல் பரிமாறல்களை ஒட்டுக்கேட்ட படையினர்
[12 - May - 2007

----------------------------------------------------------------------------------------------------

கடந்த எட்டாம் திகதி முற்பகலில் வெலிஓயா பிரதேசத்தில் ஜனகபுர பகுதியை அண்டியுள்ள புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காட்டுப்பகுதியில் புலிகள் இயக்கத்தின் இரண்டு குழுவினர் ஒருவருக்கொருவர் தீவிர தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இந்த மோதலின் போது இரண்டு தரப்பிலும் மொத்தம் மூன்று உறுப்பினர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் பலர் காயங்களுக்குள்ளானதாகவும் பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு புலிகள் இயக்கக் குழுவினரும் ஒரு தரப்பினரை மற்றத் தரப்பினர் அடையாளம் கண்டு கொள்ளாத நிலையிலேயே தவறுதலாக மோதிக் கொண்டுள்ளார்கள். குறித்த பிரதேசத்திலுள்ள புலிகள் இயக்கத்தினரில் ஒரு பகுதியினர் அங்கிருந்து தாக்குதல் நடவடிக்கைக்காகச் சென்றுவிட்டு அந்தப் பிரதேசத்தை நோக்கித் திரும்பிய வேளையிலேயே அவர்களை அரச பாதுகாப்புப் படையினர் என தவறுதலாக நினைத்த ஏனைய புலிகள் இயக்கத்தினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் திரும்பிய குழுவினரும் தாக்குதல் நடத்தியவர்கள் பாதுகாப்புப் படையினர் என நினைத்து தீவிர பதில் தாக்குதலை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல்களைத் தொடர்ந்து இī