Download Baamni  Tamil Font   Sithiram Font

Raeythjpfs;fz;fSf;F ehq;fs; JNuhfpfs;

   nghJeythjpfs;fz;fSf;F ehq;fs; jpahfpfs;  

 nrhd;dtu; ajhu;j;jthjp

***************************************************************************************************   

 

ஜீவா மரணம் ஸ்தம்பித்து போயுள்ளது திரையுலகம் சக கலைஞர்கள் கண்ணீர்
27.06.2007

ஸ்தம்பித்து போயுள்ளது திரையுலகம். காலன் செய்த காரியத்தை நம்ப முடியாமல் இடிந்து போயுள்ளனர் சக கலைஞர்கள். கோடம்பாக்கமே கோடி துணி போர்த்தியது போல் துயரத்தில் கிடக்கிறது.

ரஷ்யாவில் மாரடைப்பால் திடீர் மரணத்தை தழுவிய ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ஜீவாவின் உடல் இன்று சென்னை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீவாவின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகிலுள்ள வேப்பஞ்சேரி. இவரது தந்தை மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவர். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் மீதுள்ள ஈடுபாட்டால் இவர் தனது மகனுக்கு வைத்த பெயர்தான் ஜீவா.

தமிழ், இந்தியில் முன்னணி ஒளிப்பதிவாளராக விளங்கிய ஜீவா இயக்குனராக மாறிய படம் '12B'. இதனைத் தொடர்ந்து 'உள்ளம் கேட்குமே' படத்தை இயக்கினார். 'ரன்' படத்தின் இந்தி ரீ-மேக்கை அபிஷேக்பச்சன் பூமிகாவை வைத்து இயக்கினார். இவரது 'உன்னாலே உன்னாலே' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பூஜா, ஆர்யா, வினய் ஆகியோர் ஜீவாவால் சினிமாவுக்கு வந்தவர்கள். ஜீவாவின் திடீர் மரணம் கலையுலகினர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

"ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டேன்" என சோகமே உருவாக கூறினார் மாதவன். ஆர்யா ஜீவாவின் மரண செய்தியின் தாக்கத்திலிருந்து மீளவில்லை. "அவர் நம்மிடையே இல்லை என்பதை என் மனம் ஏற்க மறுக்கிறது" என்றார் மருகிப் போன இதயத்துடன்.

ஆஸ்கார் ரவிச்சந்திரனின் கண்கள் இன்னும் ஈரத்துடனே இருக்கிறது. இவர் 'உன்னாலே உன்னாலே படத்தின் தயாரிப்பாளர். "என்னுடைய தயாரிப்பில் காந்தி கிருஷ்ணா இயக்கும் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஜீவாவை கேட்டிருந்தேன். என்னுடைய தயாரிப்பில் மேலுமொரு படத்தை அவர் இயக்குவதாக இருந்தது....." மேற்கொண்டு பேச முடியாமல் கண்கலங்கினார் ரவிச்சந்திரன்.

நடிகை சதா இந்த ஷாக்கிலிருந்து இன்னும் மீளவில்லை. இவர் ஜீவாவின் குடும்ப நண்பர். அவரது குழந்தைகளின் விளையாட்டு தோழி. வார்த்தையிழந்து நிற்கிறேன், என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றார் வினய் கையறு மனநிலையுடன்.

ஒரு திறமையான, புத்திசாலியான, நல்ல உள்ளம் படைத்த ஒரு கலைஞனை தமிழ் சினிமா இழந்திருக்கிறது. நெகிழ்ந்த இதயத்துடன் திரைக்கலைஞர்களுடன் இணைந்து சினிசவுத்தும் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறது.

_________________________________________________________________________________________________   

 

கேன்சர் விழிப்புணர்வு  இலங்கை செல்கிறார் த்ரிஷா.21.06.2007

கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பரிவு காட்டி வருபவர் த்ரிஷா. இவர் நேரடியாகவும், தனது ரசிகர் மன்றம் வாயிலாகவும் பல்வேறு உதவிகளை இக்குழந்தைகளுக்கு செய்து வருகிறார். வாழ்வை தொலைத்த கேன்சர் நோயாளிகளுக்கு இந்த உதவிகள்தான் வசந்தம்!

தனது பிறந்தநாள் அன்று அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தார் த்ரிஷா. அங்குள்ள குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் அளித்தார். அவர்களுடன் உணவருந்தினார். பிறகு அக்குழந்தைகளுடன் அமர்ந்து 'கில்லி' திரைப்படத்தை ரசித்தார்.

தங்களது பிறந்த நாளை கேன்சர் பாதித்த குழந்தைகளுடன் செலவிட பெரிய மனது வேண்டும். இலங்கையில் கேன்சர் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இலங்கை செல்கிறார் த்ரிஷா. 23-ம் தேதி அங்கு கிளம்பிச் செல்லும் அவர் கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சந்திக்கிறார்.

 

த்ரிஷாவின் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துவோம்!

_________________________________________________________________________________________________   

 

பாரதிராஜா, இளையராஜா இணைகிறார்கள்
18.06.2007

'நாடோடி தென்றல்' படத்துக்குப் பிறகு இளையராஜா, பாரதிராஜா உறவில் விரிசல் விழத் தொடங்கியது. வைரமுத்து இளையராஜா ஈகோ மோதல் இதற்கு தூபம் போட்டது எனலாம். எப்படியோ, அதற்குப் பிறகு இளையராஜா பாரதிராஜா காம்பினேஷன் திரையில் சாத்தியப்படவில்லை.

பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்வது உண்டு. நண்பர்களாக இருவரும் தங்கள் உறவை தொடர்ந்ததால், தொழில்ரீதியான பிரிவு இவர்கள் நட்பை பாதிக்கவில்லை.

'பருத்திவீரன்' படம் பார்த்த பாரதிராஜா, அமீரிடமும் இயக்குனர் சேரனிடமும் நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டுள்ளார். இருவரும் உடனே சம்மதம் சொல்ல, அதற்கான வேலைகள் தொடங்கின.

அமீர் பாரதிராஜாவிடம் ஒரு கதை கூறியிருக்கிறார். கிராமத்து கதை. "இப்போ பிடுங்கிய கிழங்கு மாதிரி இருக்கு" என்று அமீரை பாராட்டிய பாரதிராஜா, அந்த கதையையே சினிமாவாக எடுக்கிறார். ஹீரோ சேரன்.

முப்பெரும் இயக்குனர்கள் சங்கமிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் இளையராஜா. பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' பட ரிலீசுக்குப் பிறகு இந்த புது புராஜெக்டில் இறங்குகிறார் இயக்குனர் இமயம்.

படத்தினை யார் தயாரிக்கப் போகிறார்கள் என்பதுதான் இப்போதுள்ள கேள்வி!

_________________________________________________________________________________________________   

              

விஜய் நடிக்கும் 'அழகிய தமிழ்மகன்' படத்துக்கு நீதிமன்றம் தடை! 05.06.2007

விஜய் நடிக்கும் 'அழகிய தமிழ்மகன்' படத்தை தயாரிக்கவும், வெளியிடவும் இடைக்கால தடை விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னையை சேர்ந்தவர் முகமது பரூக். திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார். இவர் நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிபவர் ஜீவா. இவர் எதிர்காலத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் இளைஞன் ஒருவனைப் பற்றிய கதையை முகமது பரூக்கிடம் கூறியிருக்கிறார். இந்த கதையை அவர் 'கில்லாடி' என்ற பெயரில் தயாரிக்க முயன்றார். பிறகு 'குருபிரசாத்' என பெயர் மாற்றப்பட்டது.

 

இதே கதையை விஜய்யிடமும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனிடமும் கூறியிருக்கிறார்கள். சிறிது நாள் கழித்துப் பார்த்தால் 'அழகிய தமிழ்மகன்' என்ற பெயரில் அதே கதையை அப்பச்சன் தயாரிக்கும் செய்தியை பத்திரிகை வாயிலாக அறிந்திருக்கிறார் முகமது பரூக். உடனடியாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்திருக்கிறார். அவர்கள் பஞ்சாயத்து பேசி ஐந்து லட்சம் தருவதாக ஒப்பந்தம் போட்டனர். அதன்படி பரூக்கிற்கு ஒரு லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி நான்கு லட்சத்தை கொடுக்காமல் நாமம் சார்த்தப் பார்த்திருக்கிறார்கள்.

 

இதனால் நீதிமன்றத்தை அணுகிய பரூக் தனக்கு சேர வேண்டிய 4 லட்சத்தை செட்டில் செய்த பிறகே படத்தை தயாரிக்கவும் வெளியிடவும் அனுமதிக்க வேண்டும் என மனு செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி படத்துக்கு இடைக்கால தடை விதித்ததுடன் நான்கு வாரத்திற்குள் பதில் மனு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

_________________________________________________________________________________________________  

              

கடல் விபத்தில் உயிர் தப்பிய நடிகர் ஷாம்

.02.06.2007
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக். கடத்தலுக்கும், போதைக்கும், பெண்களுக்கும் பிரபலமான நகர். இந்த மூன்று பெருமைகளுடன் இன்னொரு கிரீடமும் இதற்கு உண்டு. பெரும்பாலான தமிழ் சினிமா நட்சத்திரங்களின் விருப்ப ஊர் இது. சிம்பு, யுவன், செல்வராகவன் என இந்தப் பட்டியல் பெரிது.

சமீபமாக இங்கு தமிழ் சினிமா படப்பிடிப்புகளும் அதிகமாக நடக்கின்றன. 'பொல்லாதவன்' படத்தை தொடர்ந்து 'தூண்டில்' யூனிட்டும் பாங்காக் சென்றது. அங்குள்ள கோ ஐலண்டில் ஷாம், ரம்யா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை எடுப்பதாக திட்டம்.

 

ரம்யா சம்பந்தப்பட்ட காட்சியை கடற்கரையில் எடுத்தார் இயக்குனர் அதியமான். பிறகு நடிகர் ஷாம் மோட்டார் சைக்கிள் போலிருக்கும் ஜெட்ஸ்கி போட்டில் கடலின் உள்பகுதியிலிருந்து கரையை நோக்கி வருவதாக ஒரு காட்சியை எடுத்தனர்.

 

இந்த காட்சியின்போது எதிர்பாராத விதமாக போட் கவிழ்ந்து ஷாமும் அவருடன் இருந்த உதவியாளரும் கடலில் வீசப்பட்டனர். ஷாமுக்கு நீச்சல் குளத்தில் நீந்த மட்டுமே தெரியும். அதுவும் சுமாராக. உதவியாளரின் நிலைமை இன்னும் மோசம். நீச்சல் அவருக்கு கேள்வி ஞானம் மட்டுமே!

ஷாம் அரைகுறை நீச்சலை வைத்து, ஹெல்ப்..ஹெல்ப் என சத்தம் போட்டிருக்கிறார். ஹெல்ப் பண்ண வேண்டிய படப்பிடிப்புக்குழு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையில் இருக்கிறது.

 

நல்லவேளையாக படகோட்டிகளான சில சீனர்கள் ஷாமையும் உதவியாளரையும் காப்பாற்றி கரை சேர்த்துள்ளனர். உதவியாளர் தாராளமாக உப்பு தண்ணி குடித்ததால் ஆறு மணிநேரம் ஹாஸ்பிடலில் சிகிச்சை அளித்த பிறகே கண் விழித்திருக்கிறார்.

 

சீனர்கள் மட்டும் காப்பாற்றியிராவிட்டால் இந்நேரம் சரித்திரமாகியிருப்பார்கள் ஷாமும் உதவியாளரும்!

_________________________________________________________________________________________________   

              

இம்மாத இறுதி அஜித் ரசிகர்களுக்கு அனேகமாக தீபாவளியாக இருக்கலாம்.29.05.2007

அஜித்தின் லேட்டஸ்ட் அதிரடி 'கிரீடம்' இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கதைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை தொடர்ந்து வெளிவருகிறது 'பில்லா.'

மலேஷியாவில் இப்படத்தின் ஷுட்டிங் வேகமாக நடந்து வருகிறது. விஷ்ணுவர்தன் இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு நயன்தாரா, நமிதா என இரண்டு ஜோடிகள்.

 

ரஜினியின் 'பில்லா' படத்தின் ரீ-மேக்கான இதில் பழைய 'பில்லா'வில் இடம் பெற்ற 'மை நேம் ஈஸ் பில்லா...' பாடலை ரீ-மிக்ஸ் செய்துள்ளனர். அன்று தமிழகத்தை தலையாட்ட வைத்த பாடல் 2007-லும் கலக்கும் என்கிறார் விஷ்ணுவர்தன்.

 

மேலும், 'வெத்தலையை போட்டேண்டி...' பாடலையும் ரீ-மிக்ஸ் செய்கிறார்கள். 'மை நேம் ஈஸ் பில்லா...' அஜித்துக்கு ஆப்டாக இருந்ததால் பழைய பில்லாவின் இன்னொரு பாடலான 'வெத்தலையை போட்டேண்டி...' யையும் ரீ-மிக்ஸ் செய்கிறார்கள்.

 

அஜித்தின் அதிரடி ஆக்ஷ்ன் படமாக 'பில்லா' இருக்கும் என்றார் விஷ்ணுவர்தன். 'தல' ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கு!

_________________________________________________________________________________________________     

           

வாரணம் ஆயிரம்' முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது.29.05.2007

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க வேண்டும். இந்த சின்ன கேப்பில் ஹரியின் 'வேல்' படத்தில் நடிக்க கிளம்பினார் சூர்யா. 'வாரணம் ஆயிரம்' படத்துக்கு இதுவரை ஐந்து கோடி செலவழித்துள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். இந்நிலையில் படத்தை முடிக்காமல் சூர்யா 'வேல்' பக்கம் தாவினால்...?

எனக்கு பலகோடி நஷ்டமாகும் என தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்றார் ரவிச்சந்திரன். 'வாரணம் ஆயிரம்' படத்தை முடித்து விட்டு சூர்யாவை வேறு படத்துக்கு போகச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

 

சென்ற வாரம் நடந்த பஞ்சாயத்தில் முடிவு எட்டவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. அதற்குள் தனது புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார் ரவிச்சந்திரன். பிரச்சனையை நாங்களே சுமூகமாக பேசி தீர்த்துக் கொண்டதால் புகாரை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார் ரவிச்சந்திரன்.

 

பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்த நிலையில் எந்தப் படத்தில் சூர்யா முதலில் நடிக்கிறார்?

 

நமக்கு கிடைத்த தகவலின்படி சூர்யா தரப்பே வெற்றி பெற்றுள்ளது. 'வேல்' படத்தை முடித்த பிறகே 'வாரணம் ஆயிரம்' படத்தில் நடிக்கிறார் சூர்யா.

 

ஆஸ்கார் ரவிசந்திரனின் பெருந்தன்மையே பிரச்சனையை முடிக்க உதவியது என்பது இதில் முக்கியமான விஷயம்

_________________________________________________________________________________________________   

              

Vijaynew.விஜய்யின் புதிய படம் : லாரன்ஸ் இயக்குகிறார்

25.05.2007

ஹிட்டாகக்கூடிய கமர்ஷியல் மசாலா கதைகளை தேர்வு செய்வதில் விஜய் 'கில்லி'தான்.சாதாரண டான்ஸராக தனது 

கலைப்பயணத்தை ஆரம்பித்த லாரன்ஸ், அதன்பிறகு டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குனர் என விஸ்வரூப வளர்ச்சியை அடைந்துள்ளார். இன்று அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும் நிலை.

தெலுங்கில் 'ஸ்டைல்' தமிழில் 'முனி' என அவர் இயக்கும் படங்களும் சொல்லி வைத்தார்போல் வெற்றிபெற்று வருகிறது. இப்படியொரு கைராசிக்காரருடன் கமர்ஷியல் கிங் விஜய் கைகோர்த்தால் எப்படியிருக்கும்?  விரைவில் இது நடக்கபோகிறது.

 

தற்போது தெலுங்கில் நாகார்ஜுன் நடிக்கும் 'டான்' படத்தை இயக்கிவரும் லாரன்ஸ் அந்த படத்தில் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் 'டான்' படத்தின் கதை பற்றி விஜய்யின் காதில் யாரோ பாஸிட்டிவ்வாக சொல்ல, கதை கருவை கேட்டிருக்கிறார் விஜய். விஜய்க்கு அந்த லைன் பிடித்துப்போகவே லாரன்ஸை தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது.

 

அதன்படி 'டான்' தமிழில் ரீ-மேக் செய்யப்படவுள்ளது. லாரான்ஸ் தற்போது இயக்கிவரும் 'டான்', விஜய் நடித்துவரும் 'அழகிய தமிழ்மகன்' படங்கள் வெளியானதும் பட்ததை ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

_________________________________________________________________________________________________    

             

Ajithnewமே-1 அஜித்தின் பிறந்த நாளில் எதிர்பார்த்த படம். அடுத்த மாத இறுதியில் வெளியாகும்..25.05.2007

அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் மலையாள 'கிரீடம்' படத்தை தழுவி தமிழ் கிரீடத்தை எடுத்துள்ளார். ராஜ்கிரண், அஜித் தந்தை மகனாக நடித்துள்ளனர். கல்லூரி மாணவியாக வரும் த்ரிஷா ஹீரோயின். விவேக் காமெடியில் தனி ஆவர்த்தனம் செய்துள்ளார்.

 

ஆந்திராவின் ராஜமுந்திரி மற்றும் விசாகப்பட்டினத்தில் படத்தின் முதல் ஷெட்யூல்ட் ஷுட்டிங் நடத்தப்பட்டது. பாடல் காட்சி ஒன்று கேரளாவின் வண்டி பெரியார் மற்றும் ஆலப்பியில் படமாக்கப்பட்டது.

 

'கிரீடம்' படத்துக்கு ஒளிப்பதிவு திரு. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதுவரை பாடலாசிரியராக அறியப்பட்ட நா. முத்துக்குமார் முதல் முறையாக 'கிரீடம்' படத்துக்கு வசனம் எழுதி உள்ளார்.

படத்தின் மொத்த ஷுட்டிங்கும் முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் முடியும் நிலையில் உள்ளன. இதனால் ஜுன் இறுதியில் 'கிரீடம்' திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

_________________________________________________________________________________________________  

               

sivajiiரஜினியை புகழ்ந்து ஒருபக்க அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்

.24.05.2007

சமீபத்தில், அனைத்து படங்களையும் சதவீத அடிப்படையில்தான் வாங்குவோம் என ஒரு குண்டை வீசியது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். 'சிவாஜி' படத்தின் வசூலில் பங்கு பெறவே இந்த அதிரடி தீர்மானம் என பேசப்பட்டது. இது சங்கத்தை சங்கடப்படுத்தியிருக்கிறது.

 

ரஜினிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

ரஜினியின் 'உழைப்பாளி' படத்துக்கு பிரச்சனை வந்தபோது திரையரங்கு உரிமையாளர்கள்தான் அதனை தீர்த்து வைத்தனர். 'பாபா' பிரச்சனையின் போதும் பிரச்சனை பெரிதாகாமல் நாங்கள்தான் கட்டுப்படுத்தினோம் என ரஜினிக்கு உதவிய சந்தர்ப்பங்களை இவ்வறிக்கையில் பட்டியலிட்டுள்ளனர்.

மேலும், 'பாபா'வால் திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டப்பட்டபோது, பணத்தை திருப்பித்தந்த நல்ல உள்ளம் படைத்தவர் ரஜினி என உருகியுள்ளனர். அப்படிப்பட்டவருக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வருவோமா என அவ்வறிக்கையில் லாஜிக் கேள்வியும் கேட்டுள்ளனர்.

 

மொத்தத்தில் பாமர ரசிகர்கள் கம்மியான ரேட்டில் படம் பார்க்கவே இந்த தீர்மானம் ரஜினிக்கு எதிராக அல்ல என பூசி மொழுகியுள்ளனர்.

 

சரி, நாமும் நம்புவோம்!

_________________________________________________________________________________________________    

             

சிம்புதேவன் படத்தில் தயாராகிவிட்டார் விவேக்? -

 23.05.2007
அடுத்தப் படத்துக்கு தயாராகிவிட்டார் சிம்புதேவன்.

இந்தமுறையும் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸே படத்தை தயாரிக்கிறது.

 

காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடித்த எந்தப் படமும் வெற்றி பெற்றது இல்லை. இந்த சரித்திரத்தை மாற்றி எழுதியது சிம்புதேவனின் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி.' வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த இந்த சரித்திரப் படம் ஒட்டு மொத்த பார்வையாளர்களையும் கவர்ந்தது. வடிவேலுவின் இமேஜும் பலபடிகள் உயர்ந்தது.

தனது அடுத்தப் படத்தையும் காமெடியாகவே உருவாக்குகிறார். படத்தின் பெயர், 'அறை எண் 305-ல் கடவுள்.' முந்தைய படத்தின் பெயரில் இடம்பெற்றது போல் இதிலும் எண்கள் இடம் பெற்றுள்ளது.

முதலில், அறை எண் 304 என்றே இருந்தது. ஷங்கரின் ராசி எண் எட்டு என்பதால் கூட்டுத் தொகை எட்டு வரும்படி 305 என மாற்றி வைத்துள்ளனர்.

 

இம்சை அரசனில் வடிவேலுவை ஹீரோவாக்கியதுபோல், 'அறை எண் 305-ல் கடவுள்' படத்தில் விவேக்கை நாயகனாக்குகிறார் சிமபுதேவன் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உறுதி செய்யப்படாத இந்த தகவல் உண்மையா? பொய்யா?

சிம்புதேவன்தான் விளக்க வேண்டும்

_________________________________________________________________________________________________    

             

பெரியார்' கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. சத்யராஜுக்கு விருதுகளும்.21.05.2007

விருதுகளும் பட்டங்களும் குவிகின்றன. இதற்கு பிள்ளையார் சுழி (சே...பெரியார் மேட்டரில் பிள்ளையாரா?) துவக்க புள்ளியாக அமைந்தது கோவைவில் நடந்த பாராட்டு விழா!பிம்பம் திரைப்பட இயக்கம் கோவையில் 'பெரியார்' பட கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தியது. சிறப்பு விருந்தினர்கள் சத்யராஜ்,ஞானராஜசேகரன்.

மைக் பிடித்த அனைவரும் சத்யராஜை பாராட்டு மழையில் முக்கியெடுத்தனர். அதில் ஒருவர் பெரியாரைப் பற்றி இரண்டு மூன்று நான்கு என்று எத்தனை பாகம் வேண்டுமானாலும் திரைப்படமாக எடுக்கலாம் என்றார்.

சத்யராஜ் பேசுகையில் இதனை குறிப்பிட்டு, "பெரியாராக நடிப்பது எனது லட்சியமாக இருந்தது. இப்போது பெரியார் இரண்டாம் பாகத்தில் நடிப்பதே என் லட்சியம்" என கூறி கூடியிருந்தவர்களை கலங்கடித்தார்.

விழாவில் சத்யராஜுக்கு 'கலைஞர் திலகம்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. முதலில் புரட்சி தமிழன். பிறகு இன முரசு. இப்போது கலைஞர் திலகம்.

சத்யராஜ் என்ற ஒரு பெயருக்கு முன்னால் எத்தனை பட்டங்களப்பா போடுறது?

_________________________________________________________________________________________________  

               

sivaji-rajni.jpgரஜினி ரசிகர்களுக்கு கசப்பான செய்தி 'சிவாஜி' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு !19.05.2007

ரஜினி ரசிகர்களுக்கு கசப்பான செய்தி. அவர்கள் சிவாஜி'யை

பார்க்க மேலும் பதினைந்து நாள்கள் காத்திருக்க வேண்டும் ஏப்-14 

திட்டமிட்டிருந்த 'சிவாஜி' ரிலீஸ் படவேலைகள் முடியாததால் தள்ளிப் போனது. பிறகு மே 31-ந் தேதி நிறைந்த பவுணர்மி அன்று ரஜினிக்கும் பிடித்த வியாழக்கிழமை படத்தை ரிலீஸ் செய்வதாக ஏ.வி.எம். அறிவித்தது. படம் சென்ஸாரும் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் 'சிவாஜி' வசூலில் பங்கு வேண்டும் என்று பெரிய அணுகுண்டை போட்டனர் திரையரங்கு உரிமையாளர்கள். திரையரங்கு வசூலில் குறிப்பிட்ட சதவீதத்தை தந்தால் மட்டுமே 'சிவாஜி' உள்பட எந்த படத்தையும் வாங்குவோம் என கொடி பிடித்தனர்.

இந்த திடீர் குழப்பத்தால் 'சிவாஜி' வினியோகத்தில் பெரும் குழப்பம். மீண்டும் ஆதி முதல் அந்தம் வரை செலவுகளை கூட்டிக்கழித்து புதிதாக ஏரியா விற்பனை தொடங்கியது. இன்றைய நிலவரப்படி சென்னை, கோவை ஏரியாக்கள் மெகா விலைக்கு விலை போயுள்ளன. சென்னை ஏரியாவை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார்.

இந்த திடீர் குளறுபடியில் 'சிவாஜி' அடுத்தமாதம் அதாவது ஜுன் 15 ரிலீஸாகிறது. அன்றைய தினம் உலகமே எதிர்பார்க்கும் 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்' சீரிஸின் மூன்றாம் பாகம் 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் அட் வேர்ல்ட்ஸ் என்ட்' உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. தமிழில் இப்படம் 'கரீபியன் கல்லரைத்தீவு; உலகத்தின் எல்லையில்' என்ற பெயரில் வெளியாகிறது.

'ஸ்பைடர்-மேன் 3' முதல் வார இறுதியில் இந்தியாவில் மட்டும் 19 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கரீபியன் கல்லறைத்தீவு அதனை முறியடிக்கும் என்பது நிபுணர்களின் கருத்து.

ஆக, ஜுன் 15 'சிவாஜி' க்கு சரியான பேட்டி காத்திருக்கிறது!

_________________________________________________________________________________________________     

            

மலைவாழ் மக்களின் பழக்கவழக்கங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'பாலி' படத்துக்கு தடை! 19.05.2007

மலைவாழ் மக்களின் பழக்கவழக்கங்களை பின்னணியாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'பாலி.' ஸ்ரீ எனும் முன்னாள் கப்பல் அதிகாரி ஹீரோ. ஹீரோயின் ரிம்பி.ஆராய்ச்சிக்காக மலைப்பகுதிக்கு வரும் ஸ்ரீ,

மலைப்பெண்ணான ரிம்பியை கண்டதும் காதலில் விழுகிறார். இந்த காதலும் அதைத் தொடர்ந்து வரும் பிரச்சனைகளும் கதை.

'பாலி'க்கு இதுதவிர வேறொரு புதுப் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. எம்.பி. ரவீந்திரன் என்பவர் கோர்ட்டில் 'பாலி'யை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

'நீலகிரி' என்ற பெயரில் தானொரு படத்தை தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை செலவழித்ததாகவும் அந்தப் படத்தை காட்டா சீனிவாசன் என்பவர் வாங்கி 'பாலி' என பெயர் மாற்றி தயாரித்ததாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், 'பாலி' தயாரிப்பாளரான காட்டா சீனிவாசன்தான் செலவு செய்த பணத்தை இதுவரை செட்டில் செய்யவில்லையென்றும், அந்த பணம் மற்றும் கதைக்கான பணம் ஆகியவற்றை செட்டில் செய்த பிறகே 'பாலி'யை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என ரவீந்திரன் தனது மனுவில் கூறியுள்ளார்.

இதனை விசாரித்த நீதிபதி 'பாலி'யை வெளியிட தற்காலிக தடை விதித்துள்ளார்.

_________________________________________________________________________________________________    

             

எங்கள் தலைவர்களின் பாடல்களை ரீ-மிக்ஸ் என்ற பெயரில் கெடுக்காதீர்கள்!' - எம்.ஜி.ஆர்.,

18. May 2007 

சிவாஜி ரசிகர்கள் காலங்காலமாக இப்படி கூறி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். ரசிகர்கள் இதனை கூட்டம் கூடி ஒரு தீர்மானமாகவே போட்டார்கள். ஆனால் யார் கேட்பது? 

மீண்டுமொரு எம்.ஜி.ஆர். பாடல் 'கண்ணாமூச்சி ஏனடா' படத்தில் ரீ-மிக்ஸ் செய்யப்படுகிறது. செய்பவர் ரீ-மிக்ஸ் புகழ் யுவன் ஷங்கர் ராஜா!

 

'கண்ட நாள் முதல்' படத்தை இயக்கிய ப்ரியா 'கண்ணாமூச்சி ஏனடா' படத்தை இயக்குகிறார். ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் இரண்டு ஜோடிகள். ஒன்று சத்யராஜ், ராதிகா. இன்னொன்று ப்ருதிவிராஜ், சந்தியா.

 

எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த 'பெரிய இடத்து பெண்' படத்தில் கண்ணதாசன் எழுதிய புகழ்பெற்ற பாடல், 'அன்றும் வந்ததும் அதே நிலா...' இந்தப் பாடலை யுவன் ரீ-மிக்ஸ் செய்ய, சத்யராஜ் ராதிகா பாடலுக்கு ஆடுகிறார்கள்.

 

பாடலின் இறுதியில் ப்ருதிவிராஜும், சந்தியாவும் சத்யராஜ், ராதிகாவுடன் இணைந்து கொள்கிறார்கள். ப்ரியா இயக்கும் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்பவர் ப்ரீத்தி.

விரைவில் 'கண்ணாமூச்சி ஏனடா' தனது பயணத்தை தொடங்கயிருக்கிறது.

 

_________________________________________________________________________________________________                 

sivaji.jpg'சிவாஜி' படத்துக்கு அனைவரும் பார்க்கத்தகுந்த 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. THU, 17. May 2007 

லட்சக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இம்மாதம் 31-ம் தேதி சிவாஜி ரிலீஸாகிறது. ரஜினி ஜோடியாக ஸ்ரேயா நடித்திருக்கும் இப்படத்தில் விவேக் ரஜினியின் நண்பனாக காமெடி செய்துள்ளார்.

 

ஸ்ரேயாவின் அப்பாவாக பட்டிமன்ற ராஜா நடித்துள்ளார். வில்லனாக நடித்திருப்பவர் சுமன். இவர்களை தவிர ரகுவரன், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோரும் நடித்துள்ளனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

 

அதிக பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தை தணிக்கை குழுவினர் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள தியேட்டரில் பார்த்தனர். படத்தில் வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் இல்லாததால் குழந்தைகளும் பார்க்கத்தகுந்த 'யு' சான்றிதழ் அளித்தனர்.

 

படத்தின் எந்த காட்சிக்கும் தணிக்கைகுழு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பதுடன் முக்கியமான காட்சிகள் எதற்கும் கத்திரி போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

_________________________________________________________________________________________________    

             

vijay.jpgஉலகமெங்கும் உள்ள தமிழர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது கமலின் 'தசாவதாரம்.'

THU, 17. May 2007 

சிவாஜி' படத்தை குறித்தாவது சில சீக்ரெட் விஷயங்களை புகைப்படங்கள் வெளியாயின. 'தசாவதாரம்' குறித்து தகவலோ, புகைப்படமோ பெரிதாக வெளியாகவில்லை. என்ன கதை, என்ன கேரக்டர் என்பதை அறிய சினிமாவில் உள்ளவர்களிடையேயும் பெரிய போட்டியே நடக்கிறது  

சில வாரங்கள் முன்பு 'சிவாஜி' பேட்ஜ்வொர்க்கிற்காக ஏ.வி.எம். வந்த ரஜினி அருகில் 'தசாவதாரம்' படப்பிடிப்பு நடப்பதை அறிந்து அங்கு சென்றார். கமலிடம் அவர் ஏற்று நடிக்கும் பத்து கேரக்டர்கள் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். கமலின் கெட்டப்புகளை புகைப்படத்தில் பார்த்து ரஜினி வியந்துபோய் கமலை பாராட்டினார்.

 

ரஜினியை போல 'தூத்துக்குடி' ஹீரோ ஹரிக்குமாரும் 'தசாவதாரம்' படப்பிடிப்பைக் காணச் சென்றார். அவரை வரவேற்று கனிவாக பேசியது ஹரிக்குமாருக்கு இன்ப அதிர்ச்சி.

 

தற்போது விஜய்யின் 'அழகிய தமிழ்மகன்' படப்பிடிப்பு ஏ.வி.எம். மில் நடந்து வருகிறது. அருகில் 'தசாவதாரம்' ஷுட்டிங். ஆர்வமிகுதியால் 'தசாவதாரம்' அரங்குக்கு சென்றுள்ளார் விஜய். ரஜினி போலவே விஜய்யும் படத்தை பற்றியும் கேரக்டர் குறித்தும் கமலிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார்.

 

சினிமாவில் இருப்பவர்களாலேயே அதிகம் எதிர்பார்க்கபடுவதால் தசாவதாரத்தின் க்ராஃப் உயர்ந்துள்ளது.

_________________________________________________________________________________________________  

               

simbu.jpgநாயகிகள் விஷயத்தில் சிம்பு ஒரு விநாயகர். மும்பையிலும், பேஷன் ஷோக்களிலும், மற்றவர்கள்

THU, 17. May 2007 

ஹீரோயின்களுக்கு தேட்டா போட்டுக் கொண்டிருக்க, கைக்கெட்டும் சேனல்களிலிருந்து கதாநாயகிகளை தேர்ந்தெடுக்கிறார் சிம்பு; அம்மையப்பனை சுற்றி வந்து ஞானப்பழத்தை சுட்டுக் கொண்ட விநாயகர் மாதிரி. 

ரேடியோ மச்சியின் முன்னாள் தொகுப்பாளினி சுசித்ரா சிம்புவின் பிரெண்ட். 'காளை' படத்தில் ஒரு பாடலுக்கு சுசித்ராவுடன் ஆடுகிறாராம் சிம்பு. இதனை சுசித்ராவே சொல்லியுள்ளார்.

 

அதேபோல் கெட்டவன் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிப்பவர் லேகா. இவர் எஸ்.எஸ். சேனலின் தொகுப்பாளினி. 'காளை' யைவிட 'கெட்டவன்' மீதே அதிகம் கவனம் வைத்துள்ளார் சிம்பு. "எந்த சோகமாக இருந்தாலும் சரி, அதனை மறக்க செய்வது வெற்றி மட்டுமே! 'கெட்டவன்' படத்தை வெற்றி படமாக்க வேண்டும், அதுதான் இப்போதைய எனது ஒரே குறிக்கோள்" என கூறியுள்ளார்.

 

கெட்டவனின் பாடல் கம்போஸிங் ஏற்கனவே பாஸ்காக்கில் நடந்து முடிந்துள்ளது.இரண்டு பாடல்களுக்காக பாங்காக் சென்ற சிம்பும் யுவனும் ஐந்து பாடல்களை கம்போஸிங் செய்துள்ளனர். இதனால் சந்தோஷமாக இருக்கும் சிம்பு, 'காளை' முடிந்ததும் கெட்டவனை தொடங்குகிறார்.

_________________________________________________________________________________________________      

           

srikanth.jpgஅடுத்த மாதம் 18-ந் தேதி ஸ்ரீகாந்த் - வந்தனா திருமணம். ஸ்ரீகாந்தை தமிழ்நாட்டுக்கே தெரியும்.

THU, 17. May 2007 

வந்தனா? அவரை ஸ்ரீகாந்துக்கு மட்டுமே தெரியும். அதாவது ஸ்ரீகாந்த், வந்தனா குடும்பங்கள் ஏற்கனவே தெரிந்தவர்கள். பெரியோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் என்று முதலில் கூறிய ஸ்ரீகாந்த் என்ன நினைத்தாரோ திடீரென்று நானும் வந்தனாவும் காதலர்கள் என்றார். இது என்ன திடீர் குழப்பம்?  

ஸ்ரீகாந்தும், த்ரிஷாவும், அபர்ணாவும் அப்புறம் வந்தனாவும் நல்ல நண்பர்கள். படம் வெற்றி பெற்றால் நான்கு பேரும் பார்ட்டி கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில்தான் ஸ்ரீகாந்த் - வந்தனா திருமணத்தை அவர்கள் பெற்றோர்கள் தீர்மானித்தனர். அதுவரை நட்பாக பழகியவர்கள், பெற்றோரின் முடிவு தெரிந்து காதலர்களாயினர். இது நடந்தது எட்டு மாதங்கள் முன்பு. "ஆக, இது பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம் என்றாலும் ஒருவகையில் காதல் திருமணம்தான்" என்று விளக்கினார் ஸ்ரீ.

 

இவரது சந்தோஷம், வந்தனாவுக்கு நன்றாக சமைக்க தெரியுமாம். சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் மேனேஸ்மென்ட் படித்தவராம் வந்தனா.

 

சரி, வந்தனா ஸ்ரீ குறித்து என்ன சொல்கிறார்?

 

"ஸ்ரீகாந்த் எனக்கு கிடைத்தது என் பாக்கியம்." புராணகால சகுந்தலா சாவித்திரிகள் தோற்றார்கள் போங்கள்.

 

திருமணம் முடிந்ததம் ஸ்ரீகாந்துக்கு படப்பிடிப்பு இருப்பதால் நோ தேனிலவு. ஸ்ரீயையும் வந்தனாவையும் வாட்டி வரும் இப்போதைய பிரதான பிரச்சனை இதுதான்!

_________________________________________________________________________________________________                 

                    Copyright:www. angaltheaasam.com  05.05.2007